Thursday, January 19, 2012

இருதய ஆபரேஷன்

20 ஜனவரி 2012

அன்புள்ள கிரிஜா,

2008 அக்டோபரில், எனக்கு இருதய வலி வர ஆரம்பித்தது. சுமார் 15 நிமிடம் நடந்தால்,வலி வரும். பின் நின்று 1 நிமிடம் rest எடுத்து கொண்டால் normal ஆகி விடும். நடக்கும் போது தான் இந்த problem இருந்தது. மற்றபடி சாதாரணமாகத்தான் இருந்தேன். சுபா அப்போது pregnant ஆக இருந்ததால், அவள் ப்ரசவத்திற்கு பிறகு பார்த்துக்கலாம் என்று இருந்து விட்டேன்.

நாளாக நாளாக, 15 நிமிடத்திற்கு ஒரு முறை என்று வந்த வலி, 10 நிமிடம், 5 நிமிடத்திற்கு ஒரு முறை வர ஆரம்பித்தது. 2009 ஏப்ரலில் ( அப்போது நான் பூனாவில் இருந்தேன் ) வலி அதிகமாகவே, சுபா, மகேஷிடம் எனது வலியைப்பற்றி கூறினேன். அவர்கள் உடனே பூனாவின் பிரபல இருதய டாக்டரிடம் கூட்டி சென்றார்கள். அவர், ECG, treadmill test செய்து பார்த்து விட்டு, ”எல்லாம் normal ஆக இருக்கிறது, நீங்கள் ஒரு மாதம் நான் கொடுக்கும் மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டு, மறுபடியும் checkup ற்கு வாருங்கள்” என்று கூறிவிட்டார். அவர் கொடுத்த மாத்திரைகளை சாப்பிட்டபிறகு சில நாட்களுக்கு வலி குறைந்தது. பிறகு மீண்டும் பழையபடி வலி வந்தது.

சென்னைக்கு திரும்பும் முன் , மே மாத கடைசியில் ,அந்த Doctor ஐ மறுபடியும் போய் பார்த்தேன். Check செய்து விட்டு, ”problem ஏதும் இல்லை, கொடுத்த மாத்திரைகளை சாப்பிட்டு வாருங்கள், 6 மாதத்திற்கு பிறகு check up க்கிற்கு வாருங்கள், அதற்கு முன்னரே வலி அதிகமானால், சென்னையில் Doctor ரிடம் காட்டுங்கள்” என்று சொல்லி அனுப்பிவிட்டார்.

சென்னை வந்த பிறகும், வலி குறைவதாக தெரியவில்லை. சுபா ப்ரசவத்திற்காக wait பண்ணினேன்,கடவுள் மேல் பாரத்தை போட்டுவிட்டு.சுபாவிற்கு குழந்தை பிறந்து, நல்லபடியாக புண்யாகவாசனமும் நடந்து முடிந்த பிறகு,ஜூலை கடைசியில், Malar Hospitalல்,Dr.ரவிக்குமார் என்ற Cardiologist ஐ போய் பார்த்தேன். அவர், "Angiogram" செய்து பார்த்துவிடலாம் என கூறினார். Insurance formalities முடித்த பிறகு Angiogram செய்ய இருந்தார். அப்போது டில்லியில் பெரிய மன்னி காலமாகிவிட்டார்- ஆகஸ்டு 1ம் தேதி அன்று.

மறுநாள்- ஆகஸ்டு 2ம் தேதி- காலை விமானம் மூலம் நான் டில்லி கிளம்பி விட்டேன்.ராஜப்பா, மன்னி கூட வந்தார்கள்.விமானத்தில் போகும் போது, நல்ல வலி வந்து விட்டது. என்னசெய்வது என தெரியவில்லை. ராமஜெயம் சொல்லிக்கொண்டு இருந்தேன். நல்லவேளையாக, சிறிது நேரத்தில்,வலி போய் விட்டது. டில்லி சென்றவுடன் Chest Pain வந்தால் சாப்பிடவேண்டிய மாத்திரையை வாங்கி சாப்பிட்டேன்.

மன்னி காரியங்கள் முடிந்த கையோடு, ஆக 4ம் தேதி செவ்வாய் விமானம் மூலம் சென்னை திரும்பிவிட்டேன். 5ம்தேதி Malar Hospital சென்று, Dr ஐ பார்த்தேன். Insurance Co approval க்கான papers களை கொடுத்தேன். அன்று பிற்பகலே approval வந்து விட்டது. ஆகவே Dr என்னை மறுநாள்- 6ம் தேதி காலை 8 மணிக்கு Hospital வர சொல்லிவிட்டார்.

ஆக 6ம் தேதி , வியாழக்கிழமை காலை 8 மணிக்கு, Hospital சென்றேன்.காலை 9 மணிக்கு Dr ரவிக்குமார் "Angiogram" test எடுத்தார். அங்கேயே Screenல் எனது இருதயத்தில் இருந்த 3 blocks ஐ காண்பித்தார். ஆமாம், 3 blocks இருந்தன ! என்னாலேயே நம்ப முடியவில்லை !!

காலை 11 மணிக்கு, இருதய ஆபரேஷன் செய்யும் Dr K R பாலகிருஷ்ணன் என்னை கூப்பிட்டு, இதயத்தில் இருந்த blocks ஐ பற்றி கூறி விட்டு, 3 அடைப்புகள் இருப்பதால், Bypass Surgery ( CABG -Coronary Artery Bypass Graft ) தான் செய்ய வேண்டும், Angioplasty செய்யமுடியாது, என்று கூறி, Bypass Surgeryக்கு, என் சம்மதம் கேட்டார். என்க்கு என்ன Option இருந்தது ? Operation க்கு OK சொல்லிவிட்டேன். சரி, 9ம் தேதி திங்கள், CABG ஐ வைத்துக்கொள்ளலாம் என்று கூறினார். நான், “ஏன் 9ம் தேதி , இன்றே பண்ணிவிடுங்களேன்” என்று கூறினேன். அதற்கு Dr சிரித்து விட்டு ”சில prelimnary tests செய்யவேண்டும்,அதனால் இன்று செய்யமுடியாது” என கூறினார். பிறகு, அவர் Asst இடம், மறுநாள் , Slot இருக்கிறதா என கேட்டார். ( அவர் ஒரு நாளைக்கு 4 or 5 Operations செய்வார்.மறுநாள், எத்தனை Operations இருக்கின்றன, இன்னும் ஒரு Operation ஐ வைத்துக்கொள்ளலாமா என்பதைத் தான் அப்படி கேட்டார்.). மறுநாள், 2PM slot vacant ஆக இருக்கிறது என அவர் Asst கூறியவுடன், எனது Operation ஐ அந்த நேரத்திற்கு allot செய்துவிட்டார், Dr பாலகிருஷ்ணன்.

அன்று மாலையிலிருந்து எல்லா டெஸ்டுகளும் ஆரம்பித்தன. Complete Blood test, urine test, ECG, X Ray, Echo Cardiogram, Dopplers Test, Blood Clotting time test, BP, Pulse Rate என ஏகப்பட்ட டெஸ்ட்.

மறுநாள்- ஆக 7ம் தேதி-வெள்ளிக்கிழமை-- காலையில் எல்லாம் normal என result வந்த பிறகு, Operation ஐ நிச்சயம் செய்தார்கள். காலை 7 மணிக்குள் காலை டிபனை முடித்துக்கொள்ள சொன்னார்கள். இட்லி சாப்பிட்டேன்.பிறகு, என் மார்பு, வயிறு, இரண்டு கைகள்,இரண்டு கால்கள், முதுகு என எல்லா இடங்களிலும் ஷேவ் செய்தார்கள். ( Operation செய்யவும், Tubes சொருகவும், stitches போடவும் easy ஆக இருக்கும்பொருட்டு. )

சுதா family, சுபா family, சரோஜா,ரமணா, உமா , கீர்த்தனா,எனது நண்பர்கள், ரங்கராஜன், பாலதண்டாயுதம் என நிறைய பேருடன் அரட்டை அடித்துக்கொண்டு 1 மணி வரை பொழுதுபோக்கினேன்.

1.15க்கு என்னை Operation Theatreக்கு கூட்டிப்போனார்கள். அங்கு போனவுடன், Operation Table ல் படுக்கவைத்து, என் பெயர், என்ன problem, எங்கு operation என கேள்விகளை கேட்டார்கள். ( ஜீன்ஸ் படம் ஞாபகம் வந்தது )- just to make sure that they will be doing the Bypass surgery ( CABG ) on the correct person. பின் anesthesia கொடுத்தார்கள். அதன் பிறகு என்ன நடந்தது என எனக்கு தெரியாது. இடது காலிலிருந்து சுமார் 2 1/2 அடி நீள ரத்தகுழாயை கட் பண்ணி, இருதயத்தில் நாலு இடங்களில் Bypass வழிகளை ஏற்படுத்தி,Operation ஐ வெற்றிகரமாக 5 மணி சுமாருக்கு முடித்தார்கள் என பிற்பாடு தெரிந்துகொண்டேன். மாலை 7 மணிக்கு என்னை ICU க்கு மாற்றினார்கள்.

8,9,10 மூன்று நாட்கள் ICU ல் இருந்தேன். 11ம் தேதி ரூமிற்கு மாற்றி, 15ம் தேதி Discharge செய்தார்கள். ஆபரேஷனுக்கு பிறகு நான் பட்ட அவஸ்தைகளை பற்றி தெரிந்துகொள்ள, இங்கே கிளிக் செய்து படித்துக்கொள். ஆபரேஷன் முடிந்து, சுபாவும் ஊருக்கு சென்ற பின், நான் சுமார் 2 1/2 மாதங்கள் சுதா வீட்டில் தங்கி ரெஸ்டில் இருந்தேன். இந்த சமயத்தில்,சுதாவும், சந்தரும்,என்னை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டதை நன்றியோடு, நினைத்துப் பார்க்கிறேன்.

இப்படியாக எனது CABG Surgery நல்லவிதமாக முடிந்தது. Operation முடிந்து 2 1/2 வருடங்கள் ஆகி விட்டன. உடம்பு தற்போது நார்மலாக உள்ளது. கடவுளுக்கு நன்றி.

மீண்டும் சந்திப்போம்

உன் சுகவனம்