Tuesday, July 5, 2011

ஆப்தீக காரியங்கள் -டிச10-டிச14,2008

13 ஆகஸ்டு 11

அன்புள்ள கிரிஜா,

நீ கடவுளிடம் சென்று ஒரு வருடம் ஆன பிறகு உன் ஆத்மாவிற்கு செய்யவேண்டிய ஆப்தீக காரியங்களை 2008 டிசம்பர் 10,12,13,14 தேதிகளில் சிரத்தையாக செய்தேன்.

டிச 10ம் தேதி, ஊன மாஸிகம்- சுதா fly, சுபா fly, சாவித்ரி கலந்து கொண்டார்கள்.1015மணிக்கு ஆரம்பித்து 1115 க்கு முடிந்தது.

டிச 12ம் தேதி ஆப்தீக ஸோதகும்பம் - சுதா fly, சுபா fly, சாவித்ரி கூட , சரோஜா,ராஜப்பா, மன்னியும் கலந்து கொண்டு,சமையலிலும் உதவி செய்தார்கள். 10 மணிக்கு ஆரம்பித்து 1045 க்கு முடிந்தது. எல்லோரும் சாப்பிட்டு முடிக்க 1 மணி ஆகி விட்டது.

டிச 13ம் தேதி சிரார்தம் நல்ல முறையில் நடைபெற்று முடிந்தது. 12ம் தேதி கலந்து கொண்டவர்களே இன்றும் இருந்தார்கள்.1045 க்கு ஆரம்பித்து, 1145 க்கு முடிந்தது. உன் ஆத்மா சாந்தி அடைய இறைவனை ப்ராத்திக்கிறேன்.

இந்த 3 நாட்களும் ஹோமம் இல்லாததால், தினமும் கிட்டதட்ட 1 மணி நேரத்தில் காரியங்கள் முடிந்து விட்டன.

டிச 14ம் தேதி கிரேக்கியம்.நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும், சுமார் 50 பேர் கலந்து கொண்டனர். நவக்கிரஹ ஹோமமும், பூஜையும் செய்தோம். 10 மணிக்கு ஆரம்பித்து, 1145 க்கு முடிந்தது.

இந்த 4 நாட்களும், சமையலில் உதவி செய்த சரோஜா, சாவித்ரி, விஜயா மன்னிக்கு நன்றிகள் பல. சுதா , சுபா எல்லா வேலைகளையும் , மிக சிரத்தையாக செய்தார்கள். அவர்களுக்கு,உன் ஸ்பெஷல் ஆசிர்வாதங்கள் கிடைத்திருக்கும்.

மீண்டும் சந்திப்போம்....

உன் சுகவனம்

Friday, July 1, 2011

உறவுகளின் பிரிவு

4th July 2011

அன்புள்ள கிரிஜா

2007 நவம்பர் 25ம் தேதி. கடவுள் உன்னை தன்னிடம் கூப்பிட்டுகொண்டாரே, அந்த நாளிற்கு பிறகு அவர் நம்முடைய இன்னும் சில சொந்தங்களை அழைத்து கொண்டுவிட்டார்

முதலில், 2008 ஏப்ரல் 25ம்தேதி, மகேஷின் அப்பா. 23ம் தேதி Heart Attack வந்தது. உடம்பு தேறி வரும் சமயம்,25ம் தேதி 2nd Attack வந்து,அவர் எங்களை விட்டு பிரிந்தார்.

பிறகு, அதே வருடம் நவம்பர் 20ம் தேதி நம் KVS அத்திம்பேர் திடீரென உயிர் நீத்தார். 18ம் தேதி நான் அவர் வீட்டிற்கு சென்றிருந்தேன். நிறைய விஷயங்களை பற்றி நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். என்ன செய்வது? 20ம் தேதி காலை உடம்பு முடியவில்லை.1 மணி நேரத்திற்குள் எல்லாம் முடிந்து விட்டது.

2009 ஆகஸ்டு 1ம் தேதி நம் பெரிய மன்னி டில்லியில் காலமானார். அதற்கு முன் சுமார் 15 நாட்கள் உடம்பு முடியாமல் ஆஸ்பத்திரியில் இருந்தார்.சிகிச்சை பலனளிக்காமல்,அவர் உயிர் பிரிந்தது.

எல்லோருடைய ஈம சடங்குகளில் கலந்து கொண்டு குடும்பத்தினர் எல்லோருக்கும் என்னால் ஆன ஆறுதல்களை கூறி வந்தேன்.என்னால் வேறு என்ன செய்யமுடியும் , சொல்லு கிரிஜா.

இவர்களை தவிர இன்னும் சில உறவினர்களும் இந்த 4 வருடங்களில் மறைந்தனர்.

அங்கு நீ இவர்களை சந்தித்து,உரையாடி வருவாய் என நினைக்கிறேன்.எல்லோரையும் விஜாரித்ததாக சொல்.

அடுத்த கடிதத்தில் மீண்டும் சந்திப்போம்

உன் சுகவனம்

கிரிஜா, உன்னுடன் தொடர்பு கொள்ள ஒரு புது வழி



1 ஜூலை 2011

அன்புள்ளா கிரிஜா

நீ என்னை விட்டு பிரிந்த நாள் முதல், உன்னோடு பகிர்ந்துகொள்ள வேண்டிய தருணங்கள் நிறைய ஏற்பட்டுவிட்டன.ஆனால், நான் எப்பொதும் கற்பனையில் தான் உன்னோடு பேச முடிந்தது.இப்போது ஒரு யோசனை, நான் நினைப்பதை ப்ளாக் ல்,எழுதி வைத்தால் என்ன என்று .

நான் எப்போது எல்லாம் உன்னோடு பேச வேண்டும் என்று நினைக்கிறேனோ, அப்போது எல்லாம், இந்த ப்ளாக் மூலமாக உன்னோடு பேசுவேன். உனக்கு, இந்த விஷயங்கள் தெரிய வரும் என நம்புகிறேன்

இந்த ப்ளாக், நீ எங்களை விட்டு பிரிந்த பின் நம் குடும்பத்தில் நடந்த முக்கிய விஷயங்களை வரலாறாக பதிவு செய்யவும், நம் பேரன், பேத்தி மற்றும் அவர்கள் சந்ததியருக்கு ஒரு விஷய பொக்கிஷமாக இருக்கவும் உதவியாக இருக்கும்.

அவ்வப்போது உனக்கு இதன் மூலமாக லெட்டர் எழுதுகிறேன். காத்திருக்கவும்.

இப்படிக்கு உன் பிரியமுள்ள

சுகவனம்